;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரைக்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது..!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரைக்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்கு நேற்றைய தினம் (17) அத்திவாரம் இடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அதற்கான கல், மண், சீமென்ற் போன்றன படையிரால் வழங்கப்படுவதாக தெரியவருகிறது.

இதனையடுத்து இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பௌத்த , கிறிஸ்தவ , இந்து வழிபாட்டு தலங்கள் அமைப்பதற்காகவே அவ்விடத்தில் அத்திவாரம் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரை அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுமக்கள்

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்கள் சரியாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை, இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய அகதிகள் உட்பட 2500 வீடுகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. முன்னாள் அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார பௌத்த விகாரை அமைக்கும் முயற்சியை கைவிட்டு மக்கள் சேவை ஆற்றியிருந்தார்.

புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்க அதிபரோ மக்கள் பிரச்சனைகளை முதன்மை படுத்தாது மாவட்ட செயலகத்தில் மதவழிபாட்டு தலங்களை அமைப்பதிலும், உடற்பயிற்சி நிலையம் அமைப்பதிலும் மக்கள் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு வருகிறார். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வாய்மூடி மௌனிகளாக இருப்பதும் பின்னர் தேர்தல் காலங்களில் சிங்கள ஆக்கிரமிப்பு பௌத்த விகாரை என கூறி வாக்கு கேட்பதும் சகிக்க முடியாதவை என தெரிவித்தனர்

இதேவேளை, வடக்கில் 1000 பௌத்த விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*