;
Athirady Tamil News

சட்டவிரோதமான துப்பாக்கிகளுடன் இருவர் கைது..!!

0

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில் செட்கண் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவரை கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்துனில் ரணவீர தெரிவித்தார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு செட்கண் துப்பாக்கிகளுடன் இருவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*