;
Athirady Tamil News

பிலிப்பைன்ஸ் ஓட்டலில் தீ விபத்து – 4 பேர் பலி..!!

0

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் மணிலா பாவிலியான் என்னும் சூதாட்ட விடுதியுடன் கூடிய பிரபல ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கடும் புகை மூட்டத்துக்கு இடையே அங்கு சிக்கி தவித்த சுமார் 300 பேரை அவர்கள் பத்திரமாக வெளியேற்றினர். இந்த விபத்தில் ஓட்டல் பணியாளர்கள் நான்கு பேர் தீயில் கருகி உயிரிழந்ததாகவும், சுமார் 20 பேர் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 2 =

*