;
Athirady Tamil News

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம் கண்காணிப்பாளர்கள் சுட்டுக் கொலை..!!

0

பாகிஸ்தான் நாட்டில் போலியோ நோயை ஒழிப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தலைமையிலான தொண்டு நிறுவனம் ஏராளமான நிதியுதவி அளித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்பால் பாகிஸ்தானில் போலியோ நோய்சார்ந்த மரணங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பெஷாவர் மாகாணம், சபி தாசிலுக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் வீடுவீடாக சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் பணியில் சில பெண் ஊழியர்கள் உள்பட சிலர் இன்று ஈடுபட்டிருந்தனர்.

இந்த குழுவினர் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டதில் இரு கண்காணிப்பாளர்கள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து சொட்டு மருந்து முகாமில் பணியாற்றும் ஊழியர்கள்மீது தீவிரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + six =

*