;
Athirady Tamil News

பிரான்ஸில் சிறுமி பாலியல் பலாத்காரம்: பெற்றோர் கைது..!!

0

பிரான்ஸில் மூன்று வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Beauvais நகரில் வசிக்கும் குறித்த சிறுமியின் மாமா கடந்த திங்கள் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து சிறுமி குளிக்கும் போது கீழே விழுந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழு சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது தான் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, தாக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதோடு சிறுமியின் உடலில் தீக்காயங்களும் இருந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சிறுமியின் தாயும், வளர்ப்பு தந்தையும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*