;
Athirady Tamil News

மாணிக்கக் கல் அகழ்ந்தவர்கள் தப்பியோட்டம்: ஒருவரைத் துரத்திப் பிடித்த பொலிஸார்..!!

0

பொகவந்தலாவ – கெசல்கமுவ ஆற்றுப் பகுதிக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்தவர்களை கைதுசெய்யும் சுற்றிவளைப்பில் ஒருவரைதை் துரத்திப் பிடித்து பொலிஸார் கைதுசெய்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த அகழ்வு நடவடிக்கையில் 6 பேர் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவரே பிடிபட்டதாகவும் ஏனையவர்கள் தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் நாளை ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தப்பி சென்ற ஏனையவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*