;
Athirady Tamil News

Air Canada விமானத்தில் பயணித்த தட்டம்மை நோயுடைய பயணியால் ஆபத்தா?..!!

0

சுவிட்சர்லாந்திலிருந்து கனடா வந்த விமானத்தில் தட்டம்மை நோயுடைய பயணி ஒருவர் பயணித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மற்ற பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமா என்னும் கோணத்தில் Ontario சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இம்மாதம் ஆறாம் திகதி தட்டம்மை நோய் தாக்கியுள்ளது என ஆய்வகத்தால் உறுதி செய்யப்பட்ட பயணி ஒருவர் காலை 9.25 மணியளவில் சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Air Canada விமானத்தில் Ontario வந்துள்ளார்.

இதனால் அவருடன் பயணித்த சக பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா என்று கேட்டபோது இணை மருத்துவ அலுவலரான Dr. Rita Shahin, பெரும்பாலானோருக்கு ஆபத்து இல்லை என்று கூறினார்.

Ontarioவில் மட்டுமின்றி முழு கனடாவிலும் தட்டம்மை வருவது அபூர்வம்தான், ஏனெனில் இங்கு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கூறிய அவர் சில நேரங்களில் வெளி நாடுகளிலிருந்து வருவோரிடமிருந்து இந்நோய் பரவலாம் என்றும் கூறினார்.

இந்தத் தகவலை உறுதி செய்வது போல் கடந்த மாதம் சர்வதேச பயணத்திற்குப் பிறகு Bramptonஇல் ஒரு கைக்குழந்தைக்கு தட்டம்மை ஏற்பட்டது.

விமான நிலையத்திற்கு சென்று வந்தவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும், அந்த குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்தவர்களில் சில தரப்பினருக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளது.

ஒரு வயதுக்கு கீழுள்ள கைக்குழந்தைகளுக்கு தட்டம்மைக்கான தடுப்பூசி போடப்பட்டிராது என்பதால் அவர்களுக்கும், கேன்சர் போன்ற நோய்களின் சிகிச்சை காரணமாக நோயெதிர்ப்பு சக்தியில் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி போடப்படாத கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தட்டம்மை காற்றில் பரவக்கூடிய நோய் என்பதால் இருமும்போது அல்லது தும்மும்போது பரவ வாய்ப்புள்ளது என்பதால் தங்களுக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என எண்ணுபவர்கள் மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது என்று Dr. Rita Shahin தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − three =

*