;
Athirady Tamil News

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர் ராவ் இன்று சந்திப்பு..!!

0

இந்தியாவை வளர்ச்சியடைய செய்ய பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என கூறி வரும் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

இது தொடர்பாக மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்த அவர் முடிவு செய்து உள்ளார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) சந்திரசேகர் ராவ் மேற்குவங்காளம் செல்கிறார். அங்கு தலைநகர் கொல்கத்தாவில் மாலை 4 மணியளவில் அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார்.

இந்த தகவலை தெலுங்கானா முதல்-மந்திரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என சந்திரசேகர் ராவ் அறிவித்த உடனேயே, அவரை மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + five =

*