;
Athirady Tamil News

மராட்டியம், மத்தியபிரதேசத்தில் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு..!!

0

மத்திய உள்துறை அமைச்சகம் ‘இந்தியாவில் குற்றங்கள்’ என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு அது தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டு உள்ளது. அதில் மராட்டியம் மற்றும் மத்தியபிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கடந்த 2014-ம் ஆண்டில், இந்தியா முழுவதும் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 18 ஆயிரத்து 714 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 39.64 சதவீத வழக்குகள் மராட்டியம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் பதிவானவை. அதாவது மேற்கூறிய 2 மாநிலங்களில் மட்டும் 7 ஆயிரத்து 419 வழக்குள் பதிவாகி உள்ளன. இது 2015-ம் ஆண்டில் 8 ஆயிரத்து 17 ஆகவும், 2016-ம் ஆண்டில் 8 ஆயிரத்து 571 ஆகவும் உயர்ந்து உள்ளது.

மராட்டியம் மற்றும் மத்தியபிரதேசத்தை தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகி உள்ளன. அதே சமயம் இந்த பட்டியலில் 7-வது இடத்தை பிடித்து இருக்கும் தலைநகர் டெல்லியில் 2014, 2015 ஆண்டுகளை காட்டிலும் 2016-ம் ஆண்டில் மிக குறைவான வழக்குகளே பதிவாகி இருக்கின்றன.

அதே போல் உத்தரகாண்ட், அசாம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 3 ஆண்டுகளில் 10-க்கும் குறைவான வழக்குகள்தான் பதிவாகி உள்ளன. காஷ்மீரில் 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இது போன்ற ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*