;
Athirady Tamil News

11 வயது சிறுமி பெண் குழந்தைக்கு தாயானார்..!!

0

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான 11 வயது சிறுமி இன்று பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் குறித்த 11 வயது சிறுமி பெண் பிள்ளையை பெற்றெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு இரையாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் 6 பேரில் 4 பேரை ஏற்கெனவே பொலிசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாகியிருந்த எஞ்சிய 2 பேரை பொலிசார் நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்து.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த சிறுமியை குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியதாக தெரிய வந்துள்ளது.

இதில் விஜயானந்த் என்பவர் கண்பார்வை அற்றவர் எனவும் கோவிந்த் என்பவர் 61 வயது முதியவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + seventeen =

*