;
Athirady Tamil News

மீண்டும் விசாரணைக்கு வரும் கொலைகார நர்ஸின் வழக்கு: மேலும் 97 வழக்குகள் பதிவு..!!

0

ஜேர்மனியில் 6 கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கொலைகார நர்ஸ் மீது மேலும் 97 கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் நோயாளிகளை விஷம் தந்து கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 41 வயது Niels Högel மீது மேலும் 97 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 6 கொலை குற்றங்கள் நிரூபணமாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் Högel, தற்போது 97 கொலை குற்றத்திற்காக மீண்டும் விசாரணையை எதிர்கொள்ள உள்ளார்.

இந்த விசாரணையானது எதிர்வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.Högel பணி புரிந்த மருத்துவமனையில் இக்கட்டான அவஸ்தையில் சிகிச்சைபெற்று வரும் நோயாளிகளுக்கு விஷம் தந்து கொலை செய்வதை ஒரு வாடிக்கையாகவே இவர் செய்து வந்துள்ளார்.

இதை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்ட நிலையில், Högel மீது வழக்கு பதிந்து அந்த குற்றச்சாட்டானது நீதிமன்றத்தில் நிரூபணமானது.

இதனையடுத்து குறிப்பிட்ட காலகட்டத்தில் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருக்கும் விஷத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

அதில் மேலும் 97 பேர் இதேபோன்று மரணமடைந்தது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் Högel மீது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 97 மர்ம மரணங்களையும் கொலை குற்றமாக சுமத்தி விசாரணையை துவங்க உள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*