;
Athirady Tamil News

கண்ணீர் விட்டு அழுத சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்…!!

0

ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணியின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இவரின் இறுதி நிகழ்வு நேற்று (18) கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த இறுதி நிகழ்வுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை அழைத்து வந்த சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரும் கண்கலங்கியது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார். தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறியுள்ளார். இச்சம்பவம் அனைவரினது மனதையும் நெகிழ வைத்துள்ளது..

தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்துமுள்ளனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சியையே சோகத்தில் உலுக்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 2 =

*