;
Athirady Tamil News

புத்தளத்தில் நபரொருவர் மீது தாக்குதல்: மீண்டும் பதற்றம்; பொலிஸார் குவிப்பு…!!

0

புத்தளம் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸ் படைகளை அழைத்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் 77 வயதுடைய நபர் மீது குடிபோதையில் இருந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் குறித்த பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் மாதம்பே – தனியவல்லப கிராமத்தை சேர்ந்த குருப்புஆராச்சிகே சோமபால என்பவர் ஆவார்.

குறித்த நபர் மாதம்பே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவரை பொலிஸார் கைது செய்துள்ள போதிலும் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பொலிஸாரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − seven =

*