;
Athirady Tamil News

வீதியில் அநாதரவாகக் காணப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான கஞ்சாப் பொதி…!! (படங்கள்)

0

இன்று (19.03.2018) காலை ஏறாவூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அநாதரவாக காணப்பட்ட பொதியொன்றிலிருந்து சுமார் மூன்றரைக் கிலோ கிராம் கேரளக் கஞ்சாவும், கஞ்சாவை நெறுத்து விற்பதற்குப் பயன்படுத்தும் இலத்திரனியல் தராசும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், தைக்காவீதியை அண்டியுள்ள வீட்டு மதிலோரம் இந்தப் பொதி காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ‪ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையிலான பொலிஸ் அணி ஸ்தலத்திற்கு விரைந்து சென்று இந்தக் கஞ்சாப் பொதியை மீட்டனர்.

உள்ளுர் சந்தைப் பெறுமதியில் கைப்பற்றப்பட்ட இந்தக் கஞ்சா ரூபாய் 10 இலட்சம் பெறுமதியானது என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − eight =

*