;
Athirady Tamil News

கொழும்பு ஆமர் வீதியில் துப்பாக்கிச் சூடு, கணவன் பலி, மனைவி படுகாயம்…!! (வீடியோ)

0

கொழும்பு ஆமர் வீதிச் சந்தியில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த தம்பதியினர் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச்சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரிவில்லையென்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.

அதேவேளை சம்பவ இடத்திற்கு கொட்டாஞ்சேனை பொலிஸார் சென்றுள்ளனர். சம்பவத்தை நேரில் கண்டவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய துப்பாக்கிப் பிரயோகமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கணவன் உயிரிழந்த நிலையில் காயமடைந்த மனைவியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து நெரிசலுள்ள ஆமர் வீதிச்சந்தியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தினால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. அதேவேளை போக்குவரத்துகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

கொழும்பு மற்றும் அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

Gepostet von Newsfirst.lk tamil am Montag, 19. März 2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + thirteen =

*