;
Athirady Tamil News

ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியை கொலை- போலீசார் விசாரணை..!! (வீடியோ)

0

ராமநாதபுரம் நகர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சண்முகப் பிரியா (வயது 40). தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இன்று காலை வீட்டின் அருகே சண்முகப்பிரியா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் ராமநாதபுரம் பஜார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகப்பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த ஆசிரியையின் கழுத்தில் நகைகள் திருடப்பட்டிருந்தன. அவரை கொலை செய்தது யார்? எந்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சண்முகப்பியா கொலை தொடர்பாக அவரது கணவர் மோகன்ராஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 10 =

*