;
Athirady Tamil News

ஜனாதிபதி,சம்பந்தன்,விக்னேஸ்வரன் ஏமாற்றுக்காரா்கள் இரக்கமில்லாதவா்கள்…!!

0

யாழ்ப்பாணத்தில் கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சந்திக்காது ஜனாதிபதி சென்றுள்ளதால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏமாற்றத்தை அடைந்துள்ளனா்.

இந்த நிலையில் நல்லாட்சி அரசின் ஜனாதிபதி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளாா் என கவனயீா்ப்பில் ஈடுபட்ட மக்கள் ஆக்ரோசம் அடைந்தனா்.

யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இந்த நிலையில் மக்களை சந்திக்காது ஜனாதிபதி சென்ற நிலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் வேதனையுடன் தமது கவலைகள் வெளிப்படுத்தினாா்கள். இதேவேளை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கும், ஆா்ப்பாட்டகாரா்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + fourteen =

*