;
Athirady Tamil News

பதக்கத்துடன் சென்ற மாணவனுக்கு வானத்திலிருந்து வந்த ஆபத்து..!!

0

பாடசாலையில் இருந்து பதக்கத்துடன் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த மாணவன் வழியில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பலங்கொடை கைரேனகம பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் தில்ஹார ருவன் குமார என்ற 13 வயதுடைய மாணவன் பள்ளிக்கூடத்தில் இடம்பெற்ற மாணவ வகுப்புத் தலைவர் பதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பும் போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மழை இல்லாத நேரத்தில் திடீரென வானத்தில் இருந்து வந்த தீ பந்து போன்று ஏதோன்று இந்த மாணவன் உட்பட மூவரை மூட்டியது. இதில் குறித்த மாணவன் சுயநினைவற்ற நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கியமையினால்தான் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 2 =

*