;
Athirady Tamil News

கே.கே.நகரில் மகனின் கை நரம்பை அறுத்து கொன்ற தந்தை கைது..!!

0

தேனாம்பேட்டை, ஜெயம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஊர்மில்டோலியோ.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலையில் உள்ள செல்போன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மாதவ் டோலியோ (5). தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான்.

கடன் பரச்சனையால் பாதிக்கப்பட்ட ஊர்மில்டோலியோ மகனுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

கடந்த 16-ந்தேதி இரவு அவர் மகன் மாதவ் டோலியோவை கே.கே.நகரில் வேலை பார்க்கும் செல்போன் கடைக்கு அழைத்து சென்றார். அங்கு அவனது 2 கைகளின் நரம்புகளை அறுத்தார். பின்னர் ஊர்மில்டோலியோவும் தனது கைளை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் மாதவ் டோலியோ பரிதாபமாக இறந்தான். உயிருக்கு போராடிய ஊர்மில் டோலியாவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலை தேறியது.

நேற்று முன்தினம் மகன் மாதவ் டோலியோ இறந்தது குறித்து ஊர்மில்டோலியோவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர் கதறி அழுதார்.

அப்போது, கடன் பிரச்சனையால் தவித்த நான் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். இளைய மகன் மாதவ் டோலியோ மீது அதிகம் பாசம் வைத்திருந்ததால் அவனை விட்டுச் செல்ல மனம் இல்லை.

இதனால் அவனை கொன்று தற்கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால் மகன் மட்டும் இறந்து விட்டான் என்றார்.

இதையடுத்து மகனை கொலை செய்ததாக ஊர்மில்டோலியோவை வடபழனி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் ஜெயிலில் அடைத்தனர்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*