;
Athirady Tamil News

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வெள்ளி விழா…!! (படங்கள்)

0

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வெள்ளி விழா இன்று பாடசாலை அதிபர் ஜெபநெசன் தலைமையில் நடைபெற்றது.

வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாடசாலையின் வரலாற்றை உள்ளடக்கிய தரிசனம் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அதிபர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், இ.இந்திரராஜா, வவுனியா வடக்கு, தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், மற்றும் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*