;
Athirady Tamil News

எமது சொந்த இடங்களில் இன்னும் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது – ந.சிவசக்தி அனந்தன்…!!

0

எமது சொந்த இடங்களில் இன்னும் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது என்று வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி அனந்தன் தெரிவித்தார்.

இன்று வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வெள்ளிவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாறறும் போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,

கல்விச்சமூகம் சார்ந்தவர்களும், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களிற்கும் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. எங்களது பிரதேசம் நீண்ட காலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதால் நாங்கள் கல்விஇ பொருளாதார வளர்ச்சியிலே சமூக கலை கலாச்சாரங்களிலே முன்னோக்கி போக வேண்டியிருக்கின்ற நிலையில் எங்களிற்கு பல சவால்கள் இருப்பதையும் நாம் அவதானித்துக்கொண்டிருக்கிறோம்.

ஆகவே நாங்கள் அனைவரும் இணைந்து எங்கள் சமூகத்தைஇ இனத்தை முன்மாதிரியாக கொண்டு வழிகாட்ட வேண்டியது அல்லது இந்த சமூக்திற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

குறிப்பாக கல்விச்சமூகத்தை சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் இங்கிருக்கின்ற மாணவர்களை எதிர்காலத்தில் பல்வேறு துறை சார்ந்தவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு இவர்களிடம் இருக்கின்றது. போர்க்காலத்தில் எவ்வாறு செய்தோமோ அதனை விட ஒரு படி மேலாக நாம் செய்ய வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

இன்றைய காலத்திலே போருக்கு பின்னர் கல்வி அபிவிருத்தியையும் தாண்டி எம் மக்கள் சமூகத்திர் கற்க வேண்டிய விடயங்கள், அனுபவங்கள் நிறைய இருக்கின்றது. அந்த அனுபவங்களை கற்றுக்கொண்டால் மாத்திரம்தான் இந்த கல்வியின் ஊடாக மட்டுமே எமது மொழியையும் இனத்தையும் எமது பிரதேசத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

வடக்கு கிழக்கில் கல்வி கற்றுக்கொண்டிருக்கிளன்ற ஆயிரக்கனணக்கான மாணவர்கள் மத்தியில் பலருக்கு தாய்இ தந்தை அல்லது இருவருமே இல்லாத நிலை காணப்பட்டு கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.

போருக்கு பிற்பாடு எமது மக்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த யுத்தம் இல்லாத மூண்று வருட காலப்பகுதிக்குள் பல்வேறு விடயங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எங்களது தலைவர்கள் அமைதி காத்து பொறுமை காத்திருக்கிறார்கள்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூண்று இலட்சத்து அறுபதாயிரம் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி மகாவலி கங்கை தன் வசம் வைத்துக்கொண்டிருக்கின்றது.

எங்களுடைய மக்கள் அந்த காணிக்கு எந்தவிதமான ஆவணங்களை வைத்திருந்தாலும் அதற்கு மகாவலி அபிவிருத்தி சபையினரே அதற்கு சொந்தக்காரர்கள். ஆகவே இப்படிப்பட்ட நிலைமையில்தான் எமது இனம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

அகவே இதில் இருந்து நாம் மீண்டு எழ வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு கல்வி ஒன்று மட்டுமே.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*