;
Athirady Tamil News

வலி.தெற்கில் வீதி விளக்குகள் பொருத்தும் பணி மீண்டும் ஆரம்பம்…!! (படங்கள்)

0

வலி.தெற்கில் வீதி விளக்குகள் பொருத்தும் பணி மீண்டும் ஆரம்பம் – வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் நிதியொதுக்கீட்டில் பணிகள்…

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் இருபதுலட்சம் ரூபா பெறுமதியான வீதி விளக்குகளை வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித்தேர்தலையொட்டி இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீதி விளக்குகளைப்பொருத்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்ப்பட்டுள்ளன.

இந்தத்திட்டத்தின் கீழ் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட சுன்னாகம் சூறாவத்தை பகுதியில் இதன் மீள ஆரம்ப நிகழ்வு இன்று 19.03.2018 காலை 09 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் சார்பாக வலி.தெற்கு பிரதேச சபை வேட்பாளரான சுன்னாகம் ப.நோ.கூ சங்க தொழிற்சங்கத்தலைவர் செல்வகாந்தன் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரு பிரதேசசபைகளையும் சேர்ந்த வீதிகளுக்கு சுமார் 600 வீதி விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு ஒவ்வொரு வீதிகளுக்கும் பொருத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 11 =

*