;
Athirady Tamil News

யாழ். பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்ப கூடம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு..!! (படங்கள் & வீடியோ)

0

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது.

தொழில் நுட்பக்கூடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக சுமார் மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இந்த தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பேராயர் கதிரினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

அரசியல்வாதிகளுக்கிடையில் ஒற்றுமை அவசியம் – ஜனாதிபதி

அரசியல்வாதிகளுக்கிடையில் ஒற்றுமை அவசியம் – ஜனாதிபதி

Gepostet von Newsfirst.lk tamil am Montag, 19. März 2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 17 =

*