;
Athirady Tamil News

ராஜ குடும்பத்தினர் போல் நடக்க, பேச கற்றுக்கொள்ளும் வருங்கால இளவரசி..!!

0

இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொள்ள போகும் நடிகை மேகன் மார்க்கெல் திருமணத்துக்கு பிறகு ராஜ குடும்பத்தினர் போல் நடந்து கொள்ளவும், பேசவும் பயிற்சி எடுத்து வருகிறார்.

இன்று மேகன் மார்கெல் என்ன பேசினாலும் என்ன செய்தாலும் அது அவரின் தனிப்பட்ட விடயம், ஆனால் மே மாதம் 19ம் தேதிக்கு பின்னர் அவரின் செய்கைகள் அனைத்தும் ராஜ குடும்பத்து செய்கைகளாகவே பார்க்கப்படும்.

இளவரசர் ஹாரியை திருமணம் செய்துகொள்ள போகும் நடிகை மேகன் மார்க்கெல் தொழில் ரீதியாக ஒரு நடிகை எனவே அவர் திருமணமாகி ராஜ குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறுவதற்குள் ராஜ ராஜ குடும்பத்தினர் எவ்வாறு நடந்து கொள்வார்கள், பிறரிடத்தில் எவ்வாறு பேசுவார்கள் என்பதை அவர் திருமணத்துக்கு முன்னதாகவே கற்று வருகிறார்

இதன் மூலம் மேகன் மார்க்கெல் தேநீர் கோப்பையை எவ்வாறு கையில் ஏந்துவது ஆடையை எவ்வாறு அணிவது, சாப்பிடும் முறை ஆகியவற்றை கற்று வருகிறார்.இருப்பினும் மற்ற ராஜ குடும்பத்தினரை விட மேகன் மார்க்கெல்லுக்கு ஒரே ஒரு விதிமுறை மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது பொது இடங்களில் மற்றவர்களை கட்டி அணைப்பதில் இருந்து மட்டும் மார்க்கெல்லுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ராஜ குடும்ப வழக்கப்படி அவர்கள் பொது இடத்தில் யாரையும் கட்டி அணைப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − eleven =

*