;
Athirady Tamil News

புகைப்பிடிப்பதை நிறுத்த கூறிய பயணி மீது தாக்குதல்: பாரிசில் சம்பவம்..!!

0

பிரான்ஸில் மெட்ரோ ரயில் ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவர், தன்னை புகைப்பிடிப்பதை நிறுத்தக் கூறியதால் பிளேடால் தாக்கிய சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

பாரிஸில் Bréguet-லிருந்து Sabin ரயில் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்த ரயிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

அப்போது, ரயிலில் நபர் ஒருவர் புகைப்பிடித்துள்ளார், இதனை பார்த்த மற்றொரு பயணி கண்டித்ததுடன், புகைப்பிடிப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்படவே, கோபமடைந்த நபர் பிளேடால் தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளார்.காயமடைந்த நபரை காப்பாற்ற முயன்ற இருவரையும் பிளேடால் தாக்கியுள்ளார், இதுகுறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த நபருக்கு சிகிச்சை நடந்து வருவதாகவும், ஆபத்தான நிலையில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*