;
Athirady Tamil News

சட்டத்தை மீறிவிட்டார்: ஓய்வின்றி உழைத்தவருக்கு அபராதம்..!!

0

ஓய்வின்றி உழைத்ததற்காக பிரான்ஸ் நாட்டு ரொட்டி தயாரிப்பவர் ஒருவருக்கு 3000 யூரோக்கள் அபராதாம் விதிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் வாரத்தின் ஏழு நாட்களும் தனது பேக்கரியைத் திறந்து வைத்திருந்ததற்காக Cédric Vaivre என்பவருக்கு இந்த கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

வியாபாரத்திற்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படவேண்டும் என்ற சட்டத்தை மீறியதற்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் டூரிஸ்டுகள் அதிகம் வரக்கூடிய நகரான Lusigny-sur-Barseஇன் மேயர் உட்பட பலர் Cédric Vaivreக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இது டூரிஸ்டுகள் அதிகம் வரும் பகுதி. டூரிஸ்டுகள் அதிகம் வரும் நாளில் கடைகள் மூடியிருப்பதை விட மோசமான விடயம் எதுவும் இருக்கமுடியாது என்று மேயர் Christian Branle கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆனால் CLIC-P என்னும் வியாபாரிகள் யூனியனின் Eric Scherrer, உள்ளூர் சட்டங்கள் மதிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

“வாரத்தில் ஒரு நாளாவது பேக்கரி நடத்துபவர்கள் உட்பட அனைத்து உணவுத்துறையில் தொழில் செய்பவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளூர் சட்டம். நிர்ணயிக்கப்பட்ட சட்டவரம்பை விட யாரும் அதிகம் உழைக்கக்கூடாது என்பதற்காக இந்த சட்டம் வகுக்கப்பட்டுள்ளது” அன்று கூறும் அவர்

”மக்களுக்கு ஒரு நாளாவது ஓய்வு வேண்டும், அவர்களை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க முடியாது, கட்டாயம் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் ஓய்வு வேண்டும்” என்கிறார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 2 =

*