;
Athirady Tamil News

குப்பைத்தொட்டியில் கண்டெடுத்த 8 மில்லியன் யூரோவை பொலிசிடம் ஒப்படைத்த நபர் ..!!

0

ஜேர்மனியின் பிராங்பர்ட்டில் உள்ள பேக்கரி தொழிலாளி(59) ஒருவர் உணவுக்காக குப்பைத்தொட்டியின் அருகே காத்திருந்த போது, அதிலிருந்த பெட்டி ஒன்றில் கட்டுகட்டாகக் கிடைத்த 8 மில்லியன் யூரோ பணம் முழுதையும் பொலிஸ் வசம் ஒப்படைத்துள்ளார்.

ஆனால் அதை சோதித்த பின்னர் அது போலி பணக்கட்டுகள் என்பதை பொலிஸார் அறிந்து கொண்டனர்.
இருப்பினும் இவ்வளவு தொகை கைக்கு கிடைத்ததும் அது நிஜ பணமா இல்லை போலி பணமா என்று கூட ஆராயாமல் நேராக பொலிஸ் வசம் பணத்தை ஒப்படைத்த அந்த நபர் தற்போது ஹீரோவாகியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பொலிஸ் அதிகாரிகள் ​​இந்த 8 மில்லியன் பணம் போலியானது மற்றும் ஏதோ ஒரு விளையாட்டின் ஒரு பகுதியாகப் யாரோ பயன்படுத்தியுள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஆனால் எந்த விளையாட்டுக்காக இது பயன்படுத்தப்பட்டது எனும் விவரத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.
ஆதாரங்களுக்காக இந்த போலி பணத்தை வைத்துள்ளதாகவும், விசாரனை முடிந்த பின்னர் எரித்து விட முடிவு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 3 =

*