;
Athirady Tamil News

உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் மோதி பெண் பலி..!!

0

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல கார் புக்கிங் நிறுவனம், உபேர். இந்த நிறுவனத்தின் ‘ஆப்’பை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசியின் மூலம் கார் புக்கிங் செய்யலாம். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் சார்பில் தானியங்கி கார்களும் பல்வேறு நாடுகளில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவின் அரிசோனா பகுதியில் உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் மோதி சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அந்நிறுவனத்தின் தானியங்கி கார் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளன உபெர் நிறுவனம், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + seventeen =

*