;
Athirady Tamil News

துனிசியா பிரான்சிடம் இருந்த விடுதலை பெற்ற நாள்: மார்ச் 20- 1956..!!

0

துனிசியா வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும்.

நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும். துனிசியா 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1602 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. * 1616 – சேர் வால்ட்டர் ரலி 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் லண்டனில் விடுவிக்கப்பட்டார். * 1739 – நாதிர் ஷா டெல்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான். * 1760 – பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ, நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது. * 1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் 140,000 ராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான். * 1861 – மேற்கு ஆர்ஜென்டினாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.

* 1916 – அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார். * 1934 – ஜப்பானில் ஹாக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்தது. இதில் சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர். * 1942 – போலந்தில் ஸ்ஜியேர்ஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1942 – மேற்கு உக்ரைனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் நாசி ஜெர்மனியரினார் கொல்லப்பட்டனர்.

* 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது. * 1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது. * 1974 – லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. * 1995 – டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர். * 2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 10 =

*