;
Athirady Tamil News

ரதல்ல குறுக்கு வீதியில் கனரக லொறி ஒன்று விபத்து: இருவர் காயம்…!!

0

நுவரெலியாவிலிருந்து ருவான்வெல்ல பகுதிக்கு சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19.03.2018) மாலை 5 மணியளவில் இந்தவிபத்து நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு தனியார் நிறுவனம் ஒன்றிக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் தடுப்புகட்டை செயலிழந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 16 =

*