;
Athirady Tamil News

ரணிலுக்கு எதிரான பிரேரணையை எதிர்க்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு…!!

0

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை கூட்டாக இணைந்து எதிர்ப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் குழு கொழும்பில் நேற்று திங்கட்கிழமை மாலை கூடியது.

இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் பிரதமருக்கு எதிரான இந்தப் பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதற்கு ஆதரவு வழங்குவதா அல்லது எதிர்த்து வாக்களிப்பதா என்ற முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன அறிவித்துள்ளன.

எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி நேற்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதற்கெதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + ten =

*