;
Athirady Tamil News

வவுனியா ஓமந்தை நாவற்குள கிராமத்தில் வீதி புனரமைப்பு..!!

0

வவுனியா ஓமந்தை நாவற்குள கிராமத்தில் அமைந்துள்ள பாவற்குள வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் மக்களின் நலன் கருதி புனரமைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னா் வவுனியா ஓமந்தை நாவற்குள கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட 35 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள், வீதி சீரின்மையால் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக வவுனியா தெற்கு பிரதேச சபை, உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கதிரவேலு கணேசலிங்கம் தனது சொந்த நிதியைக் கொண்டு இந்த வீதியை புனரமைத்துள்ளார்.

இது பற்றி அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் தெரிவிக்கையில்…..

பலர் தேர்தல் காலங்களில் வீதியை திருத்தி தருவோம் என வாக்குறுதிகளை வழங்கினார்கள். தேர்தல் முடிந்த பின்பு யாரும் இந்த பக்கம் வரவில்லை.பல சிரமங்களுக்கு மத்தியிலே இந்த வீதியால் எமது பிள்ளைகள் நோயாளிகள் வயோதிபர்கள் என பலரும் பயணம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதியினை பதிவாளர் கணேசலிங்கம் செய்து முடித்துள்ளார்.

அவர் தேர்தல் காலத்தில் சொன்ன விடயங்களை செய்து வருகிறார்.அவரது சேவை இக்கிராமத்திற்கு வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*