வாயு கசிவினால் 50 பேர் வைத்தியசாலையில்…!!

ஜாஎல பகுதியில் உள்ள தொழிற்சலை ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜாஎல, ஏகல பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் நேற்று (19) ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 25 பேர் கம்பஹா, ஜாஎல மற்றும் ராகம ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.
இந்த 25 பேரில் 23 ஆண்களும் 3 பெண்களும் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதோபோன்று இன்றும் 25 பேரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.