;
Athirady Tamil News

வவுனியாவில் நடமாடும் உணவு விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கேடான உணவுப் பொருட்கள் விற்பனை…!! (படங்கள்)

0

வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள அரச வங்கிக்கு அருகேயுள்ள நடமாடும் உணவு விற்பனை நிலையத்தினை சுகாதார பிரிவினர் இன்று (20) சுற்றிவளைத்து பரிசோதனை மேற்கொண்ட சமயத்தில் சுகாதார சீர்கேடான உணவு பொருட்களை விற்பனை செய்த குறித்த விற்பனை நிலையத்தின் விற்பனை செய்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவு விற்பனை நிலையத்தில் பழுதடைந்த மீன், நண்டு போன்றவற்றை ‘பொரித்து’ விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உணவு விற்பனை நிலையத்திலிருந்த உணவு பொருட்களை கைப்பற்றிய வவுனியா நகரசபை சுகாதாரப் பிரிவினர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் உணவு விற்பனை நிலையத்தின் உரிமையாளரை ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

இவ் வியாபார நிலையம் புகையிரத வீதியில் அமைந்துள்ள அரச வங்கிக்கு அருகேயுள்ள மதுபான சாலைக்கு முன்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − three =

*