;
Athirady Tamil News

புத்தளம் வைத்தியசாலை தாதியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்…!!

0

புத்தளம் ஆதார வைத்தியசாலை தாதியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

வருடாந்தம் மேற்கொள்ளப்படும் இடமாற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. மெதிவத்த தெரிவித்தார்.

தாதியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக புத்தளம் பொது வைத்தியசாலையின் அன்றாட மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*