;
Athirady Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்னவுக்கு விளக்கமறியல்…!!

0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இவர் இன்று செவ்வாய்க்கிழமை மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே நீதிமன்றம் இவருக்கான விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தது.

நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கௌனி பிரதேச சபைக்காக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மீது காணப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இரவு கிரிபத்கொடை விஹாரமகாதேவி மகளிர் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.

தாக்குதலுக்கு இலக்கான வேட்பாளர் தொடர்ந்தும் கிரிபத்கொடை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − twelve =

*