;
Athirady Tamil News

பொறுக்க முடியாமல் கத்தியை எடுத்த மருமகன்…!!

0

தனது மாமாவை கத்தியால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் மருமகன், ஆரச்சிகட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாள்தோறும் மதுபானம் அருந்திவிட்டு தனது மனைவியையும், மாமியையும் தாக்கி கொடுமைப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள இயலாமல் அவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த 45 வயதான நபர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற நேற்று மாமனார், மதுபானம் அருந்திவிட்டு வழமைபோல் வீட்டில் பிரச்சினை செய்து கொண்டிருந்த போது அதனை சமரப்படுத்த மருமகன் முயற்சித்துள்ளார்.

இதன்போது மாமனார் கத்தியால் அவரை தாக்க முற்பட்ட நிலையில், வீட்டில் இருந்து பிறிதொரு காத்தியை கொண்டு மாமனாரை அவர் தாக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 25 வயதான சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிகட்டு காவல்துறை முன்னெடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 15 =

*