;
Athirady Tamil News

2 ஜி வழக்கில் ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ.யும் மேல்முறையீடு..!! (வீடியோ)

0

2 ஜி ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சி.பி.ஐ கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

சி.பி.ஐ போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை எனக்கூறின நீதிபதி ஓ.பி சைனி, ஆ.ராசா, கனிமொழி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரை விடுவித்து உத்தரவிட்டார். சிறப்பு கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருந்தது. அதற்கேற்ப சட்ட நிபுணர்களுடன் சி.பி.ஐ ஆலோசனை செய்து வந்தது.

சிறப்பு கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நீதிமன்ற பதிவாளர் ஆராய்ந்த பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சி.பி.ஐ.யும் இன்று தனது மேல்முறையீட்டு மனுவை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*