;
Athirady Tamil News

கிரிபத்கொடயில் தனியார் வங்கியில் கொள்ளை…!!

0

கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இன்று பகல் 1.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொடுக்கல் வாங்கல் செய்வது போன்று வங்கிக்கு வந்த சந்தேகநபர் ஒருவர், கத்தியை காட்டி வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி 950,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபரை கைது செய்வதற்காக கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*