;
Athirady Tamil News

நல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுவருமாறு மதத்தலைவா்களிடம் கோரிக்கை..!! (படங்கள்)

0

நல்லிணக்க செயற்பாடுகளை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ் மாவட்ட சர்வமத குழுவினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீ நாகவிகாரையின் பிரதான தேரர் மீஹா யத்துரே ஞானரத்ன தேரரின் நினைவாக தானம் வழங்கும் நிகழ்வும், சிங்கள பிரதேச சிறுவர்களுக்கான தமிழ் மொழியில் பௌத்தத்தை கற்பிக்கும் செயற்திட்டமும், நேற்று(19-03-2018) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் இடம்பெற்றது.

ஸ்ரீ நாகவிகாரையின் பிரதான தேரர் மீஹா யத்துரே ஞானரத்ன தேரர் மரித்து 3 மாத கால நினைவையொட்டி குறித்த தேரரின் ஆத்மா சாந்தியடைந்து அவரின் மறுபிறப்பு சிறப்பானதாக அமைய வேண்டும் என வேண்டி சர்வமத குழுவினரால் தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மத தலைவர்களுக்கு தானமும் பரிசில்களும் வழங்கியிருந்தார்.

அதில் சிங்கள பிரதேச சிறுவர்களுக்கான தமிழ் மொழியில் பௌத்தத்தை கற்பதற்காகவும், அவ்வாறு கற்க வரும் துறவிகளை பௌத்தராக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

சர்வமத குழுவின் செயலாளர் அருட்தந்தை டி.டிக்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சின்மையா மிசன், சைத்தனிய சுவாமிகள்,கிருபானந்தகுருக்கள், ஏ.எம்,ஏ.அஸீஸ் மௌலவி,அருட்தந்தை ஜெயசீலன், பேராயர் கதிரினால், மல்கம் ரஞ்சித், உட்பட மதகுருக்கள் பௌத்த மத துறவிகள், என பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + nineteen =

*