;
Athirady Tamil News

உடல் பருமனால் பாதிக்கப்படும் ஜேர்மானிய சிறுவர்கள்..!!

0

3 முதல் 17 வயதுக்குட்பட்ட ஜேர்மானிய சிறுவர் சிறுமியரில் 15.4 சதவிகிதம்பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த விகிதாச்சரரம் அதிகம் என்பது ஒரு பக்கம் கவலையளித்தாலும், இந்த எண்ணிக்கை பத்தாண்டுகளாக உயரவில்லை என்பது மகிழ்ச்சியான விடயம் ஆகும்.

உடல் பருமன் அதிகம் உள்ள குழந்தைகளில் பாதி பேர் வளர்ந்து பெரியவர்களானாலும் தொடர்ந்து உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் குழந்தைகளின் உடல் பருமனுக்கும் அவர்களது சமூக பொருளாதார நிலைக்கும் தொடர்பு உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகம் படிக்காத பிள்ளைகளும் அதிக வசதியுள்ள பிள்ளைகளும் இவ்விடயத்தில் பாதிக்கப்படுகின்றனர்.இன்னொரு காரணம் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல். 3 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 22.4 சதவிகிதம் பெண் குழந்தைகளும் 29.4 சதவிகிதம் பையன்களுமே உலக சுகாதார மையம் அறிவுறுத்தியபடி நாளொன்றிற்கு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கின்றனர்.

இதிலும் சமூக பொருளாதார நிலை பெரும்பங்கு வகிக்கிறது. சமுதாயத்தின் கீழ் நிலையிலிருக்கும் பிள்ளைகள் விளையாட்டுகளில் குறைவாகவே பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.

The Robert Koch Institute மூன்று கட்டங்களாக இந்த ஆய்வை மேற்கொண்டது. 2003க்கும் 2006க்கும் இடையில் முதன்முறையும், 2009க்கும்2012க்கும் இடையில் இரண்டாவது முறையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மூன்றாவது முறை 25,000 சிறுவர் சிறுமியர், பதின் பருவத்தினர் மற்றும் பெற்றோர்கள் 2014க்கும் 2017க்கும் இடையே நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் கலந்துகொண்டனர்.

பதின் பருவத்தினருக்கு இன்னொரு சவாலும் உள்ளது, அது புகைப்பிடித்தல். சிறு வயதாக இருக்கும்போது புகை பிடிக்கும் பதின் பருவத்தினர் பெரும்பாலும் வளர்ந்து பெரியவர்களாகும்போதும் புகை பிடிக்கின்றனர் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + seven =

*