;
Athirady Tamil News

உலகின் விலைவாசி குறைந்த நகரங்களின் பட்டியல்..!!

0

பொருளாதார புலனாய்வு அமைப்பு என்ற சர்வதேச அமைப்பு, உலகின் மலிவான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் விலைவாசி குறித்த ஆய்வினை, பொருளாதார புலனாய்வு அமைப்பு நடத்தியது.

அதன்படி எந்தெந்த நகரங்களில் விலைவாசி குறைவாக உள்ளது மற்றும் அதிகமாக உள்ளது என்பதையும் பட்டியலாக வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில், சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகஸ் இடம்பெற்றுள்ளது

3வது இடத்தில் கஜகஸ்தானின் அல்மாட்டி நகரமும், 4வது இடத்தில் நைஜீரியாவின் லாகோஸ் நகரமும், 5வது இடத்தில் இந்தியாவின் பெங்களூரு நகரமும் உள்ளன

பாகிஸ்தானின் கராச்சி நகரம், அல்ஜீரியாவின் தலைநகரம் அல்ஜீர்ஸ், இந்தியாவின் சென்னை நகரம், ருமேனியாவின் தலைநகர் பூஜ்சரஸ்ட் மற்றும் இந்தியாவின் டெல்லி ஆகிய நகரங்கள் முறையே 6 முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன

தொழிலார்களுக்கு சம்பளம் குறைவு, மக்களுக்கு குறைந்த வருவாய் கிடைப்பதனால் விலைவாசியும் குறைவாக உள்ளது ஆகிய காரணங்கள், இந்த நகரங்களில் விலை மலிவாக உள்ளதற்கு காரணமாகும்.

மேலும், கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்கள், நகரங்களுக்கு கொண்டு செல்ல குறைந்த செலவே ஆகிறது. அத்துடன் பல உற்பத்தி பொருட்களுக்கு அரசே மானியம் வழங்குவது போன்றவையும் இங்கு மலிவான விலைவாசி உள்ளதற்கு காரணமாகும்.உலகிலேயே அதிக விலைவாசி கொண்ட நகரமாக சிங்கப்பூர் உள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*