;
Athirady Tamil News

வெள்ளைவான் கலாசாரம் தொடர்ந்தும் இருக்க வேண்டும்…!!

0

கண்டி மாவட்டத்தின் திகன மற்றம் தெல்தெனிய பகுதிகளில் முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் தொடர்பில் பொலிசார் தாமதமின்றி விசாரணை அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நிலையிலேயே ரவி கருணாநாயக்க இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார்.

நல்லாட்சியின் குறைபாடுகள் காரணமாகவே பல விடையங்கள் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய வங்கி நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற நேரிட்ட ஸ்ரீலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றது போல் வெள்ளைவான் கலாசாரம் தொடர்ந்தும் இருந்திருந்தால் எந்தவிதப் பிரச்சனைகளும் எழுந்திருக்காது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொலிசார் சிறந்த சேவையை ஆற்றிவருவதாகவும் பெருமிதம் வெளியிட்ட ரவி கருணாநாயக்க, உயர் பதவிகளில் இருக்கும் சில அதிகாரிகள் கீழ் நிலை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முறையான உத்தரவுகளை வழங்காததாலேயே இந்த சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*