;
Athirady Tamil News

மிக மோசமான செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி…!!

0

இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பிரதேசத்தில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பின்போதே இந்தப் பெண் 5 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைதாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த பெண் தொடர்பில் கிடைக்கப்பேற்ற இரகசிய தகவலினையடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையினை மேற்கொண்டுள்ளனர். இந்த தேடுதலின்பின்னர் குறித்த பெண், பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்புத் தகவல் கூறுகின்றது.

கைதாகிய பெண், வென்னப்புவ லுணுவில பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 8 =

*