;
Athirady Tamil News

விசேட அதிரடிப்படையினர் முஸ்லீம்களை தாக்கல்..!!

0

கண்டியில் வைத்து முஸ்லீம் மத போதகர்கள் இருவர் மீது ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படை பொலிசார் கொடூரமாகத் தாக்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் ஸ்ரீலங்கா தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகளுடன் ஸ்ரீலங்கா பொலிசார் உட்பட அரச படையினருக்கும் தொடர்பிருப்பதை உறுதிப்படுத்தும் காணொளி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜே.டி.எஸ் என்ற ஸ்ரீலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் திகன – தெல்தெனிய பகுதிகளில் முஸ்லீம்கள் மீது இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆயுதங்களுடன் சென்றிருந்த விசேட அதிரடிப்படையினர் இருவர் முஸ்லீம்கள் இருவரை பொல்லுகளால் தாக்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது.

திகன ஹிஜ்ராபுரம் மஸ்ஜிதுல் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு எதிரில் இந்த சம்பவ மார்ச் ஐந்தாம் திகதி பிற்பகல் 4.59 க்கு பதிவாகியுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் இருவர், பள்ளிவாசலில் இருந்து வெளியே அழைத்த முஸ்லீம் மத போதகர்கள் மீது விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மூவருடன் இணைந்து பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.

மௌலவிகளான முகம்மட் நிஸாம்தீன் மற்றும் முகம்மட் ரமீஸ் ஆகிய இருவர் மீதும் தொடர்ச்சியாக தாக்கிய வண்ணம் இழுத்துச் சென்றுள்ள விசேட அதிரடிப்படையினர் அவர்களின் கைகளில் கத்தி மற்றும் பொல்லுகளை வைத்து புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளனர்.

எனினும் அங்கு வந்தி பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு தலையிட்டு மௌலவிகள் இருவரையும் காப்பாற்றிச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும் தாக்குதலால் படுகாயமடைந்த மௌலவிகள் இருவரும் அச்சம் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லாது தவிர்த்து வந்துள்ளனர்.

எனினும் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கடந்த பத்தாம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் மார்ச் நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு முஸ்லீம்கள் மீது சிங்கள கடும்போக்காளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நீடித்தது.

இதனால் கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட அதேவேளை நாடு தழுவிய ரீதியில் அவசரகாலச் சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டது. அதேவேளை முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களும் முடக்கப்பட்டிருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*