;
Athirady Tamil News

முதலாவது ஒருநாள் போட்டியில் பாக்கிஸ்தான் அணிடம் இலங்கை அணி தோல்வி…!!

0

பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை பெண்கள் அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் பாக்கிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

பாக்கிஸ்தான் பெண்கள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் நேற்றைய தினம் முதல் விளையாடி வருகின்றது.

இப் போட்டியில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் முதலில் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று பாக்கிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + twenty =

*