;
Athirady Tamil News

சபாநாயகரிடம் கையளிக்கப்பட உள்ள நம்பிக்கையில்லா பிரேரணை..!!

0

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டு எதிர்கட்சியினருக்கு மேலதிகமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் கையொப்பமிட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்ட பிறகு அதன் முக்கியத்துவத்தை ஆராய்ந்து, பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் என நம்புவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 13 =

*