;
Athirady Tamil News

பரராஜசிங்கம் கொலை வழக்கு: பிள்ளையான் நீதிமன்றில்..!!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில், 2015ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதிப்மாஸ்டர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, மட்டக்களப்பு மரியால் பேராலயத்தில் 2005ஆம்ஆண்டு நத்தார் ஆராதனையின் போது இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*