;
Athirady Tamil News

தேசத்துரோக வழக்கு – பாகிஸ்தான் திரும்ப பாதுகாப்பு கேட்கும் முஷாரப்..!!

0

பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999-ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முஷாரப் கடந்த 2007-ஆம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை அவர் சிறையிலடைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, அவர் மீது கடந்த 2014-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சூழலில், மருத்துவ சிகிச்சைக்காக அரசின் அனுமதியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு துபாய் சென்ற அவர், அங்கேயே தங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவரை கைது செய்து பாகிஸ்தான் கொண்டு வரும்படி அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அவரது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் முஷாரப் வழக்கறிஞர் ஒரு மனு அளித்துள்ளார். அதில், ‘பாகிஸ்தானில் முஷாரப் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள பாகிஸ்தான் வர வேண்டுமென்றால், உறுதியான பாதுகாப்பை வழங்குவதாக பாகிஸ்தான் அரசு உறுதியளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*