;
Athirady Tamil News

போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்டிய தொழிலாளி..!! (வீடியோ)

0

அயனாவரம், ராமநாதன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் சையத் முன்னாவுக்கும் தகராறு இருந்து வந்தது.

இது தொடர்பாக அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அவர்கள் இரண்டு பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது சையத் முன்னா மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தனை குத்த முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சப்பிரமணி அவரை தடுத்தார்.

இதனால் கோபமடைந்த சையத் முன்னா கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியை வெட்டினார். இதில் அவரது 2 கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பணியில் இருந்த மற்ற போலீசார் சையத் முன்னாவை மடக்கி பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

பலத்த காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு கைகளில் 8 தையல் போடப்பட்டுள்ளது. அவரை தாக்கியதாக சையத் முன்னா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அயனாவரம் போலீசார் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது போலீஸ் நிலையத்தில் வைத்தே சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*